Wednesday, November 20, 2013

கொலைகார புலிகளினால் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபாவின் 62 வது பிறந்தநாள் நினைவு தினம்!

Wednesday, November 20, 2013
சென்னை::கொலைகார புலிகளினால் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட  தோழர் பத்மநாபாவின் 62 வது பிறந்தநாள் நினைவு தினம்!
இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில் தோழர் என்ற சொல்லை மக்கள் மயப்படுத்திய பெருமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையே சாரும்

தோழர் எஸ்.ஜி. அவர்கள் தோழர் என்ற சொல்லுக்கும் தோழமை என்ற உறவுக்கும் சரியான அர்த்தபுஷ்டியை தனது வாழும் முறையாலும் நடைமுறையாலும் வழங்கினார். தோழர் என்ற சொல்லை வரட்டுத்தனமாக உருப்போடும் சூத்திரங்களின் ஒரு பகுதியாகவோ அல்லாமல் தோழர் என்பதை ஸ்தாபன உறுப்பினர்களுக்கிடையேயான உளப்பூர்வமான உறவு முறையாக அதற்குரிய வகையில் தானே முன்னுதாரணமாக நடந்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.

உயர்ந்த மனிதர்

தோழர் நாபாவின் தனிமனித குணாம்சங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உயரமான மனிதனான தோழர் அவர்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் உணர்வாலும் குணத்தாலும் பண்பாலும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். ஒரு மனிதனின் சிறந்த வாழ்வுக்கு உதாரணபுருஷராக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆஜானுபாகுவான அவரது தோற்றம் அவரது உயர்ந்த மனித அம்சங்களையே பிரதிபலித்தது.

(தோழர்கள் சென்னை)

No comments:

Post a Comment