Wednesday, November 20, 2013

செனல்4 ஊடகத்தின் மீது நம்பிக்கை கிடையாது: இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன்!

Wednesday, November 20, 2013
இலங்கை::பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் மீது நம்பிக்கை கிடையாது என இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்திற்கு அளித்த செவ்வி தொகுக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது கருத்துக்கள் முழுமையாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
45 நிமிடங்கள் செவ்வியை பதிவு செய்து அதில் மூன்று நிமிடங்கள் மட்டும் ஒளிபரப்புச் செய்தமை ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

செனல்4 ஊடகத்தின் மீதான நம்பிக்கை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செவ்வியை திரிபுபடுத்தி ஒளிபரப்புச் செய்வது ஊடக ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு அளவில் செவ்வி ஒளிபரப்புச் செய்யப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே தாம் செவ்வியை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

செவ்விகளை அளிக்க வேண்டும் என்ற அவசியம் தமக்கு இருக்கவில்லை எனவும், செனல்4 ஊடகம் வேண்டிக் கொண்டதனை அடுத்தே தாம் செவ்வி வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வியின் ஒரு பகுதி மட்டுமே ஒளிபரப்புச் செய்யப்படுமு; என அவர்கள் கு
றிப்பிட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment