Tuesday, November 19, 2013

இலங்கை விமானப்படை உத்தியோகத்தர் சக உத்தியோகத்தரை துப்பாக்கியினால் சுட்டு, தானும் தற்கொலை!

Tuesday, November 19, 2013
இலங்கை::விமானப்படை உத்தியோகத்தர் சக உத்தியோகத்தரை துப்பாக்கியினால் சுட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிதுருதலா விமானப்படைத் தளத்தில்
கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்களே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த சக உத்தியோகத்தரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
எல்ல ஹேவகே அனுஷ மதுசங்க (வயது 24) மதுகம ஜே.எம்.சுசந்த (வயது 24) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். இவ்விருவரும் அலபலாதெனிய மற்றும் மொரவக ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக தற்பொழுது நுவரெலியா ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுளளனர்.

இரண்டு சடலங்களும் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது...
 
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும், விமானப் படை  மட்டத்திலும் விசாரணைகளும் இடம்பெறுவதாக அன்றூ விஜேசூரிய மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment