Sunday, November 03, 2013
இலங்கை::மீனவர் பிரச்சினை குறித்த இந்தியாவின் தீர்வுத் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
வாரத்தில் ஒரு நாளைக்கு இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டுமென இந்தியா சோனை முன்வைத்துள்ளது.
எனினும், இந்த யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அறிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்திருந்தது.
தமிழக அரசியல்வாதிகளினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசாங்கம் இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
பல்வேறு காரணிகளுக்காக இந்த யோசனைத் திட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment