Sunday, November 03, 2013
லண்டன்;;யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் (புலிகளின் ஆதரவாளர்) இட் மில்லிபாண்ட் வலியுறுத்தியுள்ளார்.
2009ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள், இட் மில்லிபாண்டை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் தொடர்பில் பிரித்தானியாவின் பிரதிநிதித்துவம் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரித்தானியா அமர்வுகளில் பங்கேற்பதில் உடன்பாடில்லை என தொழிற்கட்சித் தலைவர் (புலிகளின் ஆதரவாளர்) இட் மில்லிபாண்ட் அறிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் கடந்த கால குற்றச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் புலிகளின் பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம் என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றையும் புலிகளின் தமிழர் பேரவை உறுப்பினர்கள் இட் மில்லிபாண்டிடம் ஒப்படைத்துள்ளனர்.


No comments:
Post a Comment