Saturday, November 23, 2013
இலங்கை::வடமாகாணத்திற்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் அரசாங்க அதிகாரியையும் சந்திக்கவில்லை. அரசாங்கத்தை இழிவுபடுத்தக் கூடிய தகவல்களை கொடுத்து உதவக்கூடிய அரசியல்
இலங்கை::வடமாகாணத்திற்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் அரசாங்க அதிகாரியையும் சந்திக்கவில்லை. அரசாங்கத்தை இழிவுபடுத்தக் கூடிய தகவல்களை கொடுத்து உதவக்கூடிய அரசியல்
சக்திகளையே அவர் சந்தித்தார் என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் வடமாகாணத்தில் உள்ள அரசாங்க அதிகாரிகளை சந்தித்திருந்தால் நாங்கள் அவருக்கு வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய தகவல்களை ஒழிவு மறைவின்றி தெரிவித்திருப்போம்.
அவர் இங்கு வந்த போது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன் என்று வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். பிரிட்டிஷ் பிரதமர் எங்களை சந்திப்பதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல்வாதிகளை சந்தித்தார் என்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மேலும் கூறினார்.

No comments:
Post a Comment