Saturday, November 23, 2013

இலங்கை மீனவர்கள் 33 பேருக்கு காவல் நீட்டிப்பு!

Saturday, November 23, 2013
ராமநாதபுரம்::இலங்கை மீனவர்கள், 33 பேருக்கு, அடுத்த மாதம், 6ம்
தேதி வரை, ராமநாதபுரம் கோர்ட் காவல் நீட்டிப்பு செய்து, உத்தரவிட்டுள்ளது.
 
இரண்டு மாதங்களுக்கு முன், இலங்கை மீனவர்கள், 33 பேர், கன்னியாகுமரி- தூத்துக்குடி கடலில், வெவ்வேறு தேதிகளில் மீன்பிடித்தனர். இவர்களை, இந்திய கடலோரக் காவல் படையினர், சிறை பிடித்து, மெரைன் போலீசில் ஒப்படைத்தனர்.
 
ராமநாதபுரம், சி.ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட, 33 பேரும், சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, "வீடியோ கான்பரன்சிங்' மூலம், ராமநாதபுரம், சி.ஜே.எம்., கோர்ட்டில் நேற்று நடந்தது. 33 பேருக்கும்,அடுத்த மாதம்,6ம் தேதி வரை, காவல் நீட்டிப்பு செய்து, நீதிபதி தர்மன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment