Monday, November 18, 2013
கலிபோர்னியா::அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்ட போது ஆள் இல்லா போர் விமானம், தவறுதலாக ராணுவ கப்பலையே தாக்கியதில் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு கடல் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 2 விமானம் தாங்கி போர் கப்பல்கள் நடுக்கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. கப்பலில் இருந்து ஆள் இல்லா போர் விமானங்களை எப்படி இயக்குவது, அதன் மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது என வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கப்பலில் இருந்து புறப்பட்ட ஆள் இல்லா போர் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. அதனால் ஆள் இல்லா விமானம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட்டு விலகி, மீண்டும் கப்பலை நோக்கி பறந்து வந்து தாக்கியது.இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், திசை திரும்பி வந்த விமானம், கப்பலை தாக்கியது. இதில் 5 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர். நிபுணர்களின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த கப்பலில் சுமார் 300 பேர் பணியில் இருந்தனர் என்றார். அதன்பின் சேதமடைந்த கப்பலை கடற்படை அதிகாரிகள் மற்றொரு படகு மூலம் சாண்டியாகோ கடற்படை பழுது பார்க்கும் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.






No comments:
Post a Comment