Monday, November 18, 2013

ரஷ்யாவில் பயங்கரம் விமானம் விழுந்து நொறுங்கியது 50 பயணிகள் உடல் கருகி பலி: தரையிறங்கும் போது பரிதாபம்!

Monday, November 18, 2013
மாஸ்கோ::ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, தரையில் மோதியதில் தீப்பிடித்து விபத்துக்கு உள்ளானது. இதில் 50 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள தோமோதேதோவோ விமான நிலையத்தில் இருந்து 44 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று மாலை விமானம் புறப்பட்டது. இது மாஸ்கோவில் இருந்து 800 கி.மீ தொலைவில் உள்ள கசான் நகருக்கு சென்றது. இந்த நகரம் தன்னாட்சி பெற்ற ததர்ஸ்தான் என்ற மாகாணத்தில் அமைந்துள்ளது. வோல்கா நதிக்கரையில் இந்த கசான் நகரம் அமைந்துள்ளது. மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கசானை விமானம் நெருங்கியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லை. இதனால் 3 முறை தரையிறங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 3வது முறையாக தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக தரையில் மோதியதில் தீப்பிடித்தது.

தீயணைப்பு படையினர் விரைந்து வருவதற்குள் விமானம் முற்றிலுமாக எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 44 பயணிகள், 6 ஊழியர்கள் என 50 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். இதில் ததர்ஸ்தான் கவர்னரின் மகனும், புதுமாப்பிள்ளையுமான ஐரக் மின்னிகானோவ் (23), உளவுத் துறை அதிகாரி அலெக்சாண்டர் ஆன்டானோவ் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர் என்றனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இது ரஷ்யாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment