Friday, November 15, 2013
இலங்கை::காணாமல் போன புலிகூட்டமைப்பின் புலிகளின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம் யாழ்நகரின் இயல்பு வாழ்க்கையினை இன்று பாதிக்கச்செய்துள்ளது. பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் பிரிட்டன் பிரதமரை சந்திக்காத வகையில் பிரதம நூலகம் முன்பதாக பொலிஸ் வாகனங்களை நிறுத்தி அவர்களை வழிமறித்து வைத்திருந்தது. மறுபுறத்தே 150 பேரைக்கொண்ட குழுவொன்று புலி ஆதரவு சனல்-4 இற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டமொன்றை நடந்தது. பிரிட்டிஸ் பிரதமர் அவர்களை பார்வையிடும் வகையில் நூலக நுழைவாயிலினில் ஆர்ப்பாட்டமொன்றை நடந்தது
புலிகளின் உறவினர்கள் தமக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டினை தகர்த்து பொலிஸாரை மீறி நுழைவாயிலினை நோக்கி செல்ல முற்பட்டனர். இந்நிலையில் வன்முறை வெடித்தது. பொலிஸ் தடையினை தாண்டி புறப்பட்ட புலிகளின் உறவினர்கள் அங்கிருந்து சென்று பிரதான நுழைவாயிலை முற்றுகையிட முற்பட அங்கு ஏற்கனவே வந்து புலிகூட்டமைப்பின் மூவர் அணியினை சந்தித்துக் கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருந்தார்.
இதனிடையே பிரதமருடன் வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் புலிகளின் உறவினர்கள் அறிக்கையிடுவதில் ஈடுபட்டிருந்தனர். புலி சனல்-4 அணி நேரடியாக தனது அறிக்கையிடலை செய்திருந்தது.








No comments:
Post a Comment