Friday, November 15, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று பிற்பகல் யாழ். பொது நூலகத்தில் வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
வடக்கிற்கு விஜயம் செய்து மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக வடக்கு அரசியல் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக டேவிட் கமரூன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பின் யாழ். பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்குச் சென்ற பிரித்தானிய பிரதமர் அங்கு ஊழியர்கள் மற்றும் பிரதானியுடன் கலந்துரையாடிய பின் வலிகாமம் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்தார்.
இந்த சந்திப்பு யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. அதே வேளை பிரதமர் கமரூன் யாழ்,உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் விஜயம் செய்து அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினார்.




No comments:
Post a Comment