Saturday, November 16, 2013
இலங்கை::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியதில்லை என நியூசிலாந்து வெளிவிவாகர அமைச்சர் மரே மக்கலே தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளுக்கு ஆதரவளிக்க வே;ணடியதில்லை என்பதே நியூசிலாந்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பால் உற்பத்தி இறக்குமதிகள் தொடர்பில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படும் என்ற அச்சத்தினால் இலங்கை தொடர்பில் நியூசிலாந்து மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மத்திய அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இதுவரையில் ஏற்படவில்லை எனவும், இதுவே அதிகாரப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மத்திய அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இதுவரையில் ஏற்படவில்லை எனவும், இதுவே அதிகாரப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment