Wednesday, November 13, 2013

புலிகளின் ஆதரவு செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரேவிற்கு, எதிராக அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்!

Wednesday, November 13, 2013
இலங்கை::புலிகளின் ஆதரவு செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரேவிற்கு, எதிராக அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.

கெலும் மக்ரே தற்போது கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. 

சனல்-4 ஊடகவியலாளர் கெலும் மக்ரேவின் வவுனியா பயணத்திற்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெலும் மக்ரே இன்று தொடரூந்து மூலம் வவுனியாவிற்கு பயணம் செய்தார். கெலும் மக்ரேவிற்கு எதிராக அனுராதபுரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

ரயிலை மறித்து சிலர் போராட்டம் நடத்தியிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தொடர்ந்து பயணத்திற்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, மீண்டும் கொழும்பு திரும்புமாறு பொலிஸார் மக்ரேவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும், வவுனியா செல்ல வேண்டுமென மக்ரே தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வழங்க முடியாத காரணத்தினால் கொழும்பு திரும்புமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் மக்ரேவை கொழும்பிற்கு அனுப்பி வைக்குமாறு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மக்ரே கொழும்பு திரும்பிவிட்டாரா, இல்லையா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இதன்போது புலிகளால் கொல்லப் பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர்
பௌத்த பிக்குகளும் பிரதேச மக்களும் கூட்டாக இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment