Sunday, November 3, 2013

மும்பையிலிருந்து இலங்கைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான போதை மாத்திரைகளை கொண்டு வந்த பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!

Sunday, November 03, 2013
இலங்கை::மும்பையிலிருந்து இலங்கைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான போதை மாத்திரைகளை கொண்டு வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கொழும்பு, வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்தப் பெண் தனது பையினுள்ள மறைத்து கொண்டு வந்த போது சோதனைகளை மேற்கொண்ட சுங்கத்திணைக்கள அதிகாரிகள் இந்த போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment