Sunday, November 03, 2013
இலங்கை::மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பஸ்ஸும் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.







No comments:
Post a Comment