Saturday, November 23, 2013

இராணுவ சேவையில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 20 ஆயிரம் சிப்பாய்களை கைது செய்ய நடவடிக்கை!

Saturday, November 23, 2013
இலங்கை::இராணுவ சேவையில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 20 ஆயிரம் சிப்பாய்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்வதாக  இராணுவம் அறிவித்துள்ளது
 
இவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களை இராணுவ பொலிஸார் நடைமுறைப்படுத்
தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களின் பட்டியலொன்று பொலிஸ் திணைக்களத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தின்போது சுமார் 30 ஆயிரம் பேர் விணப்பித்திருந்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
 
தப்பிச் சென்ற இராணுவ சிப்பாய்களில் ஒரு சிலர் மாத்திரமே குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment