Sunday, November 3, 2013

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்!

Sunday, November 03, 2013
காரைக்கால்::இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் சொந்த ஊர் திரும்பினர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்த சுரேஷ், சுதிர் ஆகிய 19 பேரும் 5 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். அங்கு உள்ள கோர்ட்டில் நேற்றுமுன்தினம் 19 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
அதனை தொடர்ந்து நேற்று அவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கமாண்டர் தேசிங் தலைமையிலான குழுவினர் சிறிய கப்பலில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 20 கிமீ தூரத்தில் கப்பலை நிறுத்தினர். பின்னர் 3 படகுகளில் மீனவர்களை ஏற்றி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை உறவினர்களும், மீனவர்களும் கண்ணீர்மல்க வரவேற்றனர்.பின்னர் 17 மீனவர்கள் பஸ்களில் ஏற்றி புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment