Thursday, October 3, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பில் தமக்கு எவ்வித தயக்கமும் கிடையாது நேரப்பிரச்சினை காரணமாக சந்திக்க முடியவில்லை: பிரதமர் மன்மோகன் சிங்!

Thursday, October 03, 2013
புதுடெல்லி::நேரப்பிரச்சினை காணமாகவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க முடியவில்லை என  பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை,  பிரதமர் மன்மோகன் சந்திக்கவில்லை.
 
தம்முடன் சந்திப்பு நடாத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்ததாகவும், நேரப்பிரச்சினை காரணமாக அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
செப்டம்பர் மாதம் 24ம் திகதி முதல் 27ம் திகதி வரையிலான காலப்பகுதியில் சந்திப்பதற்கு ஜனாதிதபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்ததாகவும், அந்த திகதிகளில் தமக்கு சந்திப்பு நடாத்த வாய்பிப்;பிருக்கவில்லை எனவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் 27ம் திகதியே தாம் நியூயோர்க்கிற்கு பயணம் செய்ததாகத் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பில் தமக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்திக்க முடியாமல் போனதற்கு வேறும் எந்த காரணிகள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதியிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகத் பிரதமர் மன்மோகன்  தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment