Thursday, October 03, 2013
சென்னை::காந்தியடிகளின் 145-வது பிறந்தநாளையட்டி மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட காந்தியடிகளின் புகைப்படத்திற்கு நேற்று கவர்னர் தலைமையில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை::காந்தியடிகளின் 145-வது பிறந்தநாளையட்டி மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட காந்தியடிகளின் புகைப்படத்திற்கு நேற்று கவர்னர் தலைமையில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு அரசு சார்பில் காந்தியடிகளின் 145ரூவது விழாவை கொண்டாடப்பட்டது. விழாவையட்டி காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலையின் கீழ் பகுதியில் காந்தியடிகளின் உருவ படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் பஙங்கேற்க கவர்னர் கே.ரோசைய்யா நேற்று வருகை தந்தார். அவரை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் உருவபடத்திற்கு கவர்னர் கே.ரோசைய்யா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து தமிழகஅமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.400 மாணவர்கள் காந்திவேடம்இசைக்குழுவினரின் தேசபக்தி பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சவுகார்பேட்டையில் உள்ள கன்யலால் அகர்வால் பால்நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 400 மாணவர்கள் காந்திவேடமிட்டு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடந்தது. இதனை அமைச்சர் கே.டி.ரஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையட்டி காமராஜர் சாலையில் காந்தியடிகள் சிலை அருகில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. விழாவையட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் 144வது பிறந்த நாளை முன்னிட்டும், கர்மவீரர் காமராஜர் அவர்களின் 39வது நினைவு நாளை முன்னிட்டும் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி எம்.எல்.ஏ., கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பி. கிருஷ்ணமூர்த்தி, சௌகத் ஷெரீப், இளைஞரணி துணை செயலாளர் கு. நல்லதம்பி எம்.எல்.ஏ., பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி காமராஜர். பா.ம.க. சார்பில் மாநில தலைவர் ஜி.கே.மணி, மூர்த்தி ஜெயராமன் மாம்பலம் வினோத் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சமத்துவ கட்சி சார்பில் காந்தி பிறந்தநாளையொட்டி அவரது மண்டபத்துக்கு அக்கட்சின் நிறுவன தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஊர்வலமாக காமராஜர் நினைவிடம் சென்று காமராஜருக்கு சிலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் எர்ணாவூர், நாரயணன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன், ஏ.பி.எஸ்.பொன்னரசன், வி.எஸ்.விஜய், கோயம்பேரி துரைமாணிக்கம் உள்ளிட்ட மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு நாடார் முற்போக்கு இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் வ.வே.இரா பால்பாண்டியன் தலைமையில் சாந்தி, மற்றும் காமராஜர் நினைவு இடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
.jpg)
No comments:
Post a Comment