Thursday, October 3, 2013

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பொதுமக்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பருத்தித்துறை முனையில் இருந்து காலிமுகத்திடல் வரையில் வாகனப்பேரணி!


Thursday, October 03, 2013
இலங்கை::கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பொதுமக்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பருத்தித்துறை முனையில் இருந்து காலிமுகத்திடல் வரையில் வாகனப்பேரணியொன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
 
இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணியை ஊடக அமைச்சின் செயலாளர் ஹேரத் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசறி ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
 
 பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள 54 நாடுகளின் தேசியக் கொடிகளைத் தாங்கியவாறு இன்றிலிருந்து 30 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த வாகனப்பேரணியானது  இலங்கையின் முக்கிய நகரங்களினூடாக செல்லவுள்ளது.
 
இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர் சேவை மன்றத்தினர், இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment