Thursday, October 03, 2013
இலங்கை::வடமாகாண சபை தொடர்பில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டன.
அத்துடன் இந்த மனுக்களுக்கு எதிராக தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு அடிப்படை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் இந்த தேர்தல் விஞ்ஞாபனம், நாட்டை பிரிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், அது உள்நாட்டு அரசியல் அமைப்புக்கு முரணானது என்றும் கூறி, தேசபற்றுள்ள தேசிய இயக்கம், தேசத்துக்கு ஆதரவான பிக்குகள் முன்னணி மற்றும் ஏனைய மூன்று பொது மக்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது..
அவற்றில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
கடந்த 18ம் திகதி முதன்முறையாக இந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம் இன்று பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
இதனடிப்படையில் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நேற்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகி குறித்த மனுக்களுக்கு எதிராக அடிப்படை முறைப்பாட்டை தெரிவித்தனர்.
இந்த முறைப்பாடை எழுத்து மூலம் வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் இரண்டு வா
ர கால அவகாசம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment