Friday, October 25, 2013

இந்திய-பாக். எல்லையில் தொடர்ந்து சண்டை: படை குவிப்பு!

Friday, October 25, 2013
ஜம்மு::இந்தியா_பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு ராணுவத்தினர்களுக்கிடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதனையொட்டி பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் பதட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதை தடுத்து நிறுத்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினரும் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் 136 தடவைகள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
 
மேலும் சர்வதேச எல்லையையொட்டி உள்ள இந்திய காவல் நிலையங்கள் மீது ராக்கெட் வீச்சு, பீரங்கி குண்டு தாக்கல், இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுடுவது போன்ற அத்துமீறலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி ஜம்மு பகுதியில் உள்ல ஜம்பா பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சென்றிருந்தார்.
 
அதிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலை அதிகரித்துள்ளனர். ஜம்பா, மற்றும் ஜம்மு மாவட்டங்களையொட்டி உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் ராக்கெட், ஏவுகணை மார்டர் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றனர். இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார் என்றும் மற்றொரு வீரர் படுகாயம் அடைந்தார் என்றும் எல்லைப்பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
இதனையொட்டி எல்லைப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படை அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானும் பதிலுக்கு கூடுதல் ராணுவத்தை குவித்து வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. 

No comments:

Post a Comment