Friday, October 25, 2013

கொமன்வெல்த் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும்: இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம்!

Friday, October 25, 2013
புதுடில்லி::காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இந்தியாவிற்கான இலங்கை தூதர் எச்சரித்துள்ளார். இலங்கையில் வரும் நவ.15-ம் தேதி நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என இன்று நடந்த தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகளான தி.மு.க. உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு வரவேற்றன.

இந்த தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்; தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். இது குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும். அவர் வெளிநாட்டு பயணம் முடிந்து வந்த பிறகு முடிவுகள் எடுக்கப்படும். பிரதமர் இது குறித்து நல்ல முடிவு எடுப்பார். என்றார்.

தீர்மானம் கவலை அளிக்கிறது:

இந்த தீர்மானம் குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாசம் டி.வி. சானலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக சட்டசபை தீர்மானத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த தீர்மானம் கவலை அளிக்கிறது. தவறான தகல்கள் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடா பிரதமர் மட்டும வரமாட்டோம் என கூறியுள்ளார். ஏனைய நாடுகளுக்கு பிரச்சனை இல்லை.

இந்தியா உள்பட 30 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது இலங்கையில் தமிழர்கள் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை தமிழக, இந்திய தலைவர்கள் வந்து பார்க்கட்டும். இது தொடர்பாக இவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அவரிடம் கேட்ட போது ; புலிகள் காரணமாக கடந்த 30 ஆண்டு காலமாக மீன் பிடிக்கவில்லை. தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள் தான் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக புகார் கூறுகின்றனர். இதனால் நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும் ?

பிரதமர் வருகை குறித்து இந்திய அரசாங்ம் தான் முடிவு செய்யும். பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்தது பரிசிலீப்போம். மாநாட்டினை தவிர்த்தால் சர்வதேச சமூகத்தில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment