Friday, October 25, 2013

2009ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி கெப்பித்திக்கொல்லாவ கிளைமோர் தாக்குதல்: 64 பேர் உயிரிழந்து சம்பவம்: முன்னாள் புலி உறுப்பினருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை!

Friday, October 25, 2013
இலங்கை::கெப்பித்திகொல்லாவ பகுதியில் பஸ் மீது நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு உதவி புரிந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரு
க்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
குண்டுத் தாக்குதல் நடத்தவென மரம் ஒன்றின் மீது ஏறி தீவிரவாதிகளுக்கு சமிக்ஞை வழங்கியதாக சந்தே நபர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.அதனால் அவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மேமா ஸ்வர்ணாதிபதி தீர்ப்பளித்தார்.
 
2009ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி கெப்பத்திகொல்லாவ - யக்கவெவ பிரதேசத்தில் இ. போ. ச பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 64 பேர் உயிரிழந்து மேலும் பலர் படுகாயமடைந்தமை குறிப்பிடத் தக்கது.

 

No comments:

Post a Comment