Friday, October 25, 2013

எல்பிட்டிய பிரதேசத்தில், ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல் ஒருவரின் வீட்டில், புலிகளின் ஆயுதங்கள் மீட்பு!

Friday, October 25, 2013
இலங்கை::எல்பிட்டிய பிரதேசத்தில், ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல் ஒருவரின் வீட்டில்,  புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ கோப்ரலையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ கோப்ரல் 22 ஆண்டுகள் விஜயபா படையணியில் கடயைமாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினர் புலிகளின் நயாறு முகாமை தாக்கி அழித்த போது இந்த ஆயுதங்களை தாம் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக இராணுவக் கோப்ரல் விசாரணகைளின் போது தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை நடாத்தும் நோக்கில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் சந்தேக நபரை பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
சீ4 ரக வெடிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
 

No comments:

Post a Comment