Friday, October 25, 2013

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கின்ற இலங்கை அகதிகள் உடனடியாக நாடுகடத்தப்படும்: அவுஸ்திரேலியா!

Friday, October 25, 2013
இலங்கை::சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கின்ற அகதிகள் உடனடியாக நாடுகடத்தப்படும் கொள்களை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரமாக கடைபிடிக்கிறது.

இதன்அடிப்படையில், கடந்த வாரம் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த 79 பேரில் 73 பேர் உடனடியாக நாடுகடத்தப்பட்டதுடன், எஞ்சிய 6 பேரும் எதிர்வரும் நாட்களில் நாடுகடத்தப்படவுள்ளனர்.

இந்த நிலையில், அபாயகரமான பயணத்தின் ஊடாக, இலங்கையில் இருந்து யாரும் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்க வேண்டாம் என்று அவுஸ்திரேலியா கோரியுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment