Friday, October 25, 2013
இலங்கை::வட மாகாண சபைக்கான 450 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கட்டட திறப்பு விழாவில், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் நிதி ஒதுக்கீட்டில் சுகாதார தேவையுடைய 36 பேருக்கு சிவி விக்னேஸ்வரனால் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. 51 பேருக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 36 பேர் உத்தியோகப்பூர்வ வைபவத்தில் அதை பெற்றுக் கொண்டனர்.

.jpg)

No comments:
Post a Comment