Thursday, October 24, 2013

அவுஸ்ரேலிய பிரதமர் டோனி எபோட், அரசாங்கம் இலங்கைக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, October 24, 2013
மெல்பேர்ன்::அவுஸ்ரேலிய பிரதமர் டோனி எபோட், அரசாங்கம் இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு மிகமுக்கிய பிரச்சினையாக இருந்த ஆட்கடத்தலை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு முயற்சிகள் குறித்தே அவர் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறவுள்ள பொது நலவாய மாடுகள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கும் பொருட்டு, அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எட்மிரல் திசிர சமரசிங்க, அவுஸ்ரேலிய பிரதமரை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பு மாநாட்டுக்கான அழைப்பிதலை இலங்கை ஜனாதிபதி சார்பில் அவுஸ்திரேலிய பிரதமரிடம் திசர சமரசிங்க உத்தியோகபூர்வமாக கையளித்தார். இதன்போது அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசோப்பையும் இலங்கை உயர்ஸ்தானிகர் சந்தித்தார்.
tamil matrimony_INNER_468x60.gif
    

No comments:

Post a Comment