சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று மாலை விமானம் வந்தது. இதில் வந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது கொழும்பு அருகே உள்ள கண்டியை சேர்ந்த முகமது நவாஸ் (வயது 40) என்பவரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை போட்டனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.
அவர் வைத்திருந்த சூட்கேசின் பட்டை சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அவற்றை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது அதில் தங்க பிஸ்கட்டுகளை தட்டி போல் மாற்றி அமைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 800 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் ‘முகமது நவாஸ் கொழும்பில் இருந்து தங்க பிஸ்கட்டுகளை சென்னைக்கு ரூ.3 ஆயிரம் பணத்திற்காக கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்’.
இதையடுத்து கொழும்பு வாலிபர் முகமது நவாசை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக வந்த விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்தார். இவரது சூட்கேசை சோதனை செய்தபோது அதில் 1 கிலோ தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
தங்க பிஸ்கட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி வந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment