Saturday, October 12, 2013

தமிழ்த் தேசியக் புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிலிருந்து தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்பது உறுப்பினர்கள் நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை!

Saturday, October 12, 2013
இலங்கை::வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கேனஸ்வரன் முன்னிலையில் சந்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று முன்பகல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றதுடன், தமிழ்த் தேசியக் புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிலிருந்து தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்பது உறுப்பினர்கள் நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை.
 
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில் அங்கம் வகிக்கும் ஐந்து உறுப்பினர்களும் நேற்றைய இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் தர்மலிங்கம் சித்தார்த்ததனின் புளொட் உறுப்பினர்கள் இருவரும் செல்வம் அடைக்கலநாதனின் டெலோ கட்சியில் அங்கம் வகிக்கும் இரு உறுப்பினர்களும் நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனிப்பட்ட முடிவுகளை எடுத்துள்ளது எனவும் அமைச்சர்களின் தெரிவில் கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அக்கட்சி அலட்சியப்படுத்தியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 
வட மாகாண சபையின் முக்கிய பொறுப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றும், அவ்வாறு நடக்கவில்லையென்றும், இதன்மூலம் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த குறிக்கோள் நிறைவு செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதனால் நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வில் டெலோ கட்சியின் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கலந்து கொண்டிருந்த போதும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
 
இந்நிலையில் வட மாகாண சபைக்குத் தெரிவான ஈ.பி.ஆர்எல்.எப். உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், சிவப்பிரகாசம் சிவமோகன், எம். தியாகராஜா, மயில்வாகனம் இந்திரராஜா, ஆறுமுகம் சின்னத்துரை, துரைராஜா ரவிகரன், புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன், தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், டெலோ அமைப்பின் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், குணசீலன் ஆகியோரே நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்காதவர்களாவர். அதேவேளை, நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், மக்கள் சார்ந்த முடிவுகளை தான்தோன்றித்தனமாக எடுக்கக்கூடாது.
வன்முறைக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம் என்பதை எவரும் மறக்கக்கூடாது எனவும் சுய இலாபத்திற் காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அமைச்சுக்கள் தொடர்பில் யாராவது கேள்வி கேட்டிருந்தால் அதற்குப் பதில் கூற நாம் தயாராக இருப்பதாகவும் யாரும் அவ்வாறு தன்னிடம் கேட்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுக் காலை இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றதுடன், நான்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 
நேற்றுக் காலை யாழ். நகரிலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய வட மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அங்கிருந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு வருகை தந்ததும் பதவிப் பிரமாண நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கடந்த 7ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள தமது புதிய அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். புதிதாக நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் தமது கடமைகளைப் பெறுப்பேற்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்க்கூட்டமைப்பு பின்னர் அறிவிக்கவுள்ளது.”
 
நேற்றைய தினம் அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியிடம் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமத்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment