Saturday, October 12, 2013

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் பதவி;பிரமாணம்!!

Saturday, October 12, 2013
இலங்கை::அண்மையில் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக்  (புலி)கூட்டமைப்பின் அமைச்சுப் பதவி தெரிவு குறித்து ரெலோ அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வுகளில் ரெலோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நூற்றுக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் முள்ளிவாய்க்காலில் ரெலோ உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

எவ்வாறெனினும், பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment