Saturday, October 12, 2013

ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய கப்பலொன்று இலங்கையை நோக்கிவருகிறது: இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க!

Saturday, October 12, 2013
இலங்கை::ஹெரோயின் போதைப் பொருள்  அடங்கிய கப்பலொன்று இலங்கையை  நோக்கிப் பயணித்து வருவதாக தகவல்கள்   தெரிவிக்கின்றன 
 
குறித்த கப்பல் அரேபிய கடற்பரப்பில் காணப்படுவதாக 
ஆப்கானிஸ்தானில் போதைப் பொருள் ஏற்றப்பட்ட மேற்படி கப்பல் பாகிஸ்தான் வழியாக இலங்கை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கராச்சியில் வைத்து இந்த ஹெரோயின் போதைப் பொருள் பொதியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்தக் கப்பல் பிரவேசித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.
 
இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க அவர்கள்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment