Wednesday, October 23, 2013
இலங்கை::60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து எடுத்துச் செல்ல முயன்ற ஒருவர் இன்று அதிகாலை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கத்தை மும்பைக்கு செல்லும் நோக்கில் விமான நிலையத்திற்கு வந்திருந்த இந்தியப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க அத்தியட்சகருமான லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் பயணப் பொதியில் ஒரு கிலோகிராமுக்கும் மேற்பட்ட தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கருக் கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லைகளை சென்னையில் இருந்து இறக்குமதி செய்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை: மூவர் கைது!
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறினால் 30 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் மாமனார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


No comments:
Post a Comment