Wednesday, October 23, 2013

எமது நாட்டுக்கு மனித உரிமைகள் தொடர்பில் கற்றுத் தந்தது வெளிநாட்டுகள் அல்ல: பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்!

Wednesday, October 23, 2013
இலங்கை::இலங்கைக்கு மனித உரிமைகள் தொடர்பில் கற்றுத் தந்தது வெளிநாட்டுகள் அல்லவென பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் தீர்ப்பதன் பொருட்டு, கண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட நீதிமன்றத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று எமது நாட்டின் அடிப்படை உரிமைகள் குறித்து பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எனினும், எமது நாட்டுக்கு மனித உரிமைகள் தொடர்பில் கற்றுத் தந்தது வெளிநாட்டுகள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment