Saturday, October 05, 2013
இலங்கை::மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நெடுங்கண்டல் கிராமத்தில் போரினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய மக்களுக்கு ‘போர்த்துக்கல் கறிட்டாஸ் இலங்கை செடேக்’ அமைப்பின் ஊடாக வழங்கிய நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று வியாழக்கிழமை(3-10-2013) மாலை பயனாளிகளுக்கு கையளிக்க்ப்பட்டது.
போர்த்துக்கல் கறிட்டாஸ் இலங்கை செடேக்’ அமைப்பின் ஊடாக வழங்கிய நிதியுதவியுடன் மன்னார் வாழ்வோதயம் தலா 6இலட்சம் ரூபா செலவில் அமைத்துக்கொடுத்த 55 வீடுகள் மேற்படி பயணாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, போர்த்துக்கல் நாட்டு கறிட்டாஸ் தலைவர் பொண்சேக்கா, இலங்கை தேசிய கறிட்டாஸ் இயக்குனர் அருட்பணி. யோர்ஐ; சிகாமணி அடிகளார், மன்னார் வாழ்வோதய இயக்குனர் அருட்பணி nஐயபாலன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பயணாளிகளுக்கு வீட்டின் திறவுகோளை வழங்கி வீட்டை அதீதிகள் திறந்து வைத்தனர்.





No comments:
Post a Comment