Saturday, October 5, 2013

மன்னாரில் படகு கவிழ்ந்து விபத்து: நால்வர் பலி, ஒருவரை காணவில்லை!

Saturday, October 05, 2013
இலங்கை::மன்னார் பலுகஹதுறை கடலில் இன்று முற்பகல் படகொன்று கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
 
மன்னாரிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.
 
உயிரிழந்த நால்வரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
விபத்துக்கு முகங்கொடுத்த மேலும் 11 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் காணமற்போயுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமன்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
காணமற்போன சிறுவனை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment