Tuesday, September 3, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது அதிகார வரம்பை மீறி கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்!:-புலிகள் . தலைவன் மரணித்த இடத்தில் மலரஞ்சலி!!!

Tuesday, September 03, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட் டில், இலங்கை சர்வாதிகார போக்கில் பயணித்துக்கொண்டி ருப்பதற்கான சமிக்ஞைகள் இருப்பதாக ஓர் அரசியல் கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
இது சர்வதேச சிவில் சேவை அதிகாரியான ஆணையாளரின் அதிகார வரம்பை மீறிய செயலாகும் என்று தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெட்டத்தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கம் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடுத்த அழைப்பை ஏற்று ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் வைத் திருக்கும் தொடர்பின் நிமித்தமே இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டது.
 
எல்லோரும் உணரக்கூடிய வகையில் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு முழுமையான இலங்கை விஜயத்தை மேற்கொண்டதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.தான் அங்கத்துவ நாடுகளுக்கு செய்யும் விஜயத்தில் இதுவே நீண்டகால விஜயமென்று அவர் கூறியிருக்கிறார். இலங்கை அரசாங்கம் திருமதி நவநீதம்பிள்ளை சந்திக்க விரும்பியவர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு இடமளித் ததுடன், யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் தொடர்ந்து இடம் பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் பற்றியும் அரசாங்கம் அவருக்கு தகவல்களை தெரியப்படுத்தியதை நவநீதம்பிள்ளையே ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் கருத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. புலிகள் அமைப்பின் உண்மை யான நிலைப்பாட்டை குறிப்பிட்ட அவர், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் புலிகளை  நினைத்து துதிபாடுகிறார்கள். இது போன்ற ஒரு பயங்கர அமைப்பை மகிமைப்படுத்துவதற்கு இட மளிக்கலாகாது என்ற உண்மை நிலையை நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருப்பது நல்ல விடயமாகும்.
 
தனது விஜயத்தின் போது மறைமுகமாக முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு மலரஞ்சலி செய்த விடயம் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரியவந்தது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை சார்பில் இவ்விதம் 30 ஆண்டுகால யுத்தத்தின் போது மரணித்த அனைவருக்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியின் முன்னரே மனித உரிமை ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தியிருக்க வேண்டுமென்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.
அதற்கு பதில் புலிகள் . தலைவன் மரணித்த இடத்தில் மலரஞ்சலி செலுத்தியமை தவறு என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
 
இப் படியான நிகழ்வு இடம்பெறும் என்பது சில மணித்தியா லங்களுக்கு முன்னர் தான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுபற்றி நாம் நடத்திய விசாரணையின் போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட பிரதிநிதிக்குக்கூட இந்த நிகழ்வு நடைபெறும் என்பது தெரியாதிருந்தது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள், உள்ளூர் ஊடகவியலாளர்கள், ஆணையாளர் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் போது அவரை பின்தொடரக்கூடாதென்று கேட்டிருந் தனர். இவ்விதம் சென்றால் அவர் சந்திக்கும் கிராமத்து மக்க ளுடனான கலந்துரையாடலின் இரகசியத்தன்மை பாதிப்புக்குள் ளாகும் என்றே இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.
 
ஆணையாளரின் பேச்சாளர் ஜெனீவாவில் இருந்து 3 சர்வதேச தொலைக்காட்சி முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளை இலங்கை க்கு ஆணையாளரின் விஜயத்திற்கு முன்னரே வரவழைக்கப் பட்டிருக்கிறார். முள்ளிவாய்க்காலில் மலரஞ்சலி செய்யும் நிகழ்வு பற்றிய செய்திகளை அனுப்புவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. இலங்கை அரசாங்கம் இதுவொரு பொருத்தமற்ற செயலென்று சுட்டிக்காட்டியதை அடுத்து, உயர்ஸ்தானிகர் இந்த நிகழ்வை இரத்துச் செய்து இந்த தொலைக்காட்சி ஊடகவிய லாளர்களுக்கு சுருக்கமான பேட்டிகளை வேறொரு இடத்தில் வழங்கினார்.
 
சட்டம் ஒழுங்கு பற்றிய புதிய அமைச்சு இரண்டு அமைச்சுகளாக பிரிக் கப்பட்டாலும் அவை இரண்டும் ஜனாதிபதியின் கீழ் செயற்படும் என்பதும் அது வேறொரு சிவிலியன் அமைச்சின் கீழ் கொண்டு வரப்படாது என்பதற்கான காரணங்கள் இந்தக்கூட் டத்தின் போது ஆணையாளருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும், பொதுவாக பொலிஸ் திணைக்களம் ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் உள்நாட்டு அமைச்சின் கீழ் இருந்த போதும் பொதுவாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந் தமை சுட்டிக்காட்டப்பட்டது.
 
ஜனாதிபதி அவர்கள் இலங்கை சாசனத்தின்படி நாட்டின் முப்படை களின் பிரதம தளபதியாகவும் இருக்கிறார். புதிதாக அமைக்கப் பட்ட சட்டம் மற்றும் ஒழுங்குக்கான அமைச்சு ஒரு சிவிலியன் அமைச்சாகும். இது ஜனாதிபதியின் கீழ் இருக்கும் நிதி திட்டமிடல் மற்றும் துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சைப் போன்று ஒரு சிவிலியன் அமைச்சு என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வெறுப் புணர்வு மற்றும் வன்முறைகள் பற்றிய சம்பவங்களை மூடி மறைக்க பார்க்கிறதென்று தெரிவித்துள்ள கருத்து எங்களை ஆச் சரியத்தில் ஆழ்த்துகிறது.
 
இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யின் அரசாங்க தலைவர் மட்டத்தில் விசாரணைகள் நடத்தப் பட்டன என்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
ஐக்கிய நாடுகள் ஆணையாளர் சுதந்திர சதுக்கத்தில் பெளத்த கொடியொன்று பறப்பதை கண்டதாக குறிப்பிட்டிருந்தார். சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் தேசிய கொடியும், அதனுடன் தொடர் புடைய கொடிகளும் மாத்திரமே பறக்கவிடப்படுகின்றன என்பதை நாம் அவருக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம் என்று தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment