Tuesday, September 3, 2013

சிறையில் செல்போன் ராஜீவ் கொலையாளி நளினி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Tuesday, September 03, 2013
இலங்கை::சென்னை::ராஜீவ் கொலையாளி நளினி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக நளினி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் சம்மன் அனுப்பியது. இதற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தேவதாஸ் இன்று விசாரித்தார்.

நளினி சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, நளினி மீதான செல்போன் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே இதே போல் ஒரு வழக்கு அவர் மீது தொடுக்கப்பட் டது. அப்போது சிறையில் உயர் வகுப்பில் இருந்து சாதாரண வகுப்புக்கு அவர் மாற்றப்பட்டார். தற்போது மீண்டும் அதே குற்றச் சாட்டை கூறியிருப்பது தவறு. அதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராகி, செல்போன் வைத்திருந்ததற்காக நளினியை உயர் வகுப்பில் இருந்து சாதாரண வகுப்புக்கு மாற்றியது உண்மைதான். அந்த உத்தரவு பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனவே, நளினி மீதான வழக்கு விசார ணைக்கு தடை விதிக்க கூடாது என்றார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கு விசார ணைக்கு தடை விதிக்க முடியாது. அடுத்த விசாரணை வரும் 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment