Tuesday,September,03,2013
இலங்கை:.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை புலிகளின் தீவிர ஆதரவாளர். இவரிடம் இலங்கை நீதி கேட்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது.
நாட்டுக்குள் நவநீதம்பிள்ளையை அனுமதித்திருக்கவே கூடாது. இலங்கை வெளிப்படைக் கொள்கையுடன் செயற்பட்ட போதிலும் நவநீதம்பிள்ளை புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்தே கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளக அரசியல் விவகாரங்களில் நவநீதம்பிள்ளை தலையிட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதேபோன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் பேச்சைக் கேட்டு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுவது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. தான் நேர்மையானவள் என்பதைக்காட்டிக்கொள்ள போலியாக புலிகளை விமர்சித்தமை உலக மகா நடிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நவநீதம்பிள்ளை ஆரம்ப காலம் தொட்டே செயற்பட்டார். இலங்கை விஜயத்தில் தனக்கு சாதகமான சாட்சிகளையும் தடயங்களையும் வடக்கு மட்டும் கிழக்கிற்கான விஜயத்தின் போது நவநீதம்பிள்ளை சேகரித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் வாய்மூலமான விளக்கமளிப்பை இலங்கை தொடர்பில் முன் வைப்பார். இதன் பின்னர்இ எதிர்வரும் மார்ச் மாதம் அமர்வில் முழு அளவிலான அறிக்கையினை இலங்கைக்கு எதிராக நவநீதம்பிள்ளை சமர்ப்பிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
உண்மையில் ஜெனீவாவில் தீர்மானத்தை நிராகரித்தது போல் நவநீதம்பிள்ளையின் வருகைகளையும் இலங்கை நிராகரித்திருக்க வேண்டும். ஏனெனில் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பதவியில் இருந்தாலும் அவர் முழு அளவில் புலிகளின் ஆதரவாளர் எனவும் குறிப்பிட்டார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தடயங்களை தேடி அவ்வறிக்கையினை நியாயப்படுத்தி நெறிப்படுத்துவதே நவநீதம்பிள்ளையின் நோக்கமாகும் என்று தெரிவித்த சம்பிக்க ரணவக்க இதற்கு எந்த விதத்திலும் இடமளிக்க முடியாது எனக்கூறினார்.

No comments:
Post a Comment