Tuesday, September 03, 2013
சென்னை::முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீடு அருகில் சுற்றித் திரிந்த, இலங்கைப் பெண்ணை, பாதுகாப்புப் பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை::முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீடு அருகில் சுற்றித் திரிந்த, இலங்கைப் பெண்ணை, பாதுகாப்புப் பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் கார்டன் பகுதியில், நேற்று முன்தினம், 53 வயது பெண்
ஒருவர், சுற்றிக் கொண்டிருந்தார். மாலையில் அவர், முதல்வர் வீடு அருகில் வந்தார்.
அப்போது திடீரென பாதுகாப்பு போலீசாரை மீறி, முதல்வர் வீடு இருக்கும் பகுதியில்
நுழைய முயன்றார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பெண்ணைப்
பிடித்து, தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில்,
அவர், இலங்கை, கொழும்பு, முகமதியாபுரம், மண்டல் பட்டு ரோட்டைச் சேர்ந்த, பரிமளா
காந்தி, 53, என்பது தெரியவந்தது.
இலங்கையில் இருந்து, கடந்த ஜூலை மாதம், இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த இவர், ஒரு
மாதத்திற்கான சுற்றுலா விசா காலம் முடிந்த நிலையில், சென்னையில் தங்கியுள்ளார்.
விசா காலம் முடிந்தும் சென்னையில் தங்கினால், போலீசாரால் கைது செய்யப்படுவோம்
என்பதால், முதல்வரிடம் விசாவை நீட்டிக்கக் கோரிக்கை விடுக்க, வந்ததாகவும் போலீஸ்
விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதையடுத்து, பரிமளா காந்தியை, மயிலாப்பூரில் உள்ள
பெண்கள் காப்பகத்தில், தேனாம்பேட்டை போலீசார் தங்க வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment