Wednesday, September 11, 2013
இலங்கை::வடமாகாண சபைத் தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியான எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும் என்பதால் இத்தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் முக்கியமானதொரு தேர்தலாகும் என அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவர் றொபின் மூடியிடம் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவர் றொபின் மூடி யாழ்.ஆயரை அவரின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மக்களுடைய நிலைமைகளை அவதானிப்பதற்காகவும் இத்தேர்தல் சதந்திரமாக நடைபெறுமா என்பதை அவதானிப்பதற்காகவும் அவுஸ்திரேலியத் தூதுவர் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்திருந்தார். அவர் இத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறுமா-? இத்தேர்தலில் மக்களுடைய நிலை என்ன?- மக்கள் வாக்களிப்பார்களா-? இத்தேர்தல் வடமாகாண மக்களுக்கு முக்கியமானதொரு தேர்தலாக அமையுமா? என எம்மிடம் வினாவியதாக யாழ் ஆயர் தெரிவித்தார்.
இத்தேர்தல் மாகாண சபைக்கான தேர்தலாக அமைந்தாலும் இத்தேர்தலின் ஊடாக எமது ஜனநாயக உரிமைகளுக்கான எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடியும் என்பதால் இத்தேர்தல் மக்களுக்கு முக்கியமான தேர்தலாக அமையும் என அவுஸ்ரேலியத் தூதுவருக்கு ஆயர் சுட்டிக்காட்னார்.
எனவே இத்தேர்தலில் சகல மக்களும் வாக்களித்து தமக்கு விருப்பமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பமாக அமைகிறது என அவரிடம் தெரிவித்திருந்தாகவும் அவர்களும் அதனையே விரும்புவதாக தம்மிடம் தெரிவித்ததாகவும் குற்பிபட்ட ஆயர் குறிப்பாக சகல நாடுகளும் நடைபெறவுள்ள இந்த வடமாகாண சபைத் தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதையே விரும்புகின்றன என மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment