Wednesday, September 11, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விஞ்சியதாகவும் வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு நீட்டப்படும் மற்றுமொரு சயனைட் குப்பியாகவே நாம் கருதுகிறோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு கட்சியின் தலைமை அலுவலகத் தில் நேற்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் சுதந்திரமாக விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சைனைட் குப்பியை போலவே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயார் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைப் பிரகடனத்தை மிகவும் தந்திரமாக தயாரித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டு இரு இனங்களிடை யேயும் ஒற்றுமையை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும்இத்தரு ணத்தில் இந்த ஒற்றுமையை நிரந்தரமாக வேறுபடுத்துவதற்காக தந்திரமாக தயாரிக் கப்பட்ட ஆவணமாகவே இதனை கருதுகிறோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 30 வருட யுத்தத்தின் மூலம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னரான அடிப்படைவாத ஆவணமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1977 இல் வட்டுக்கோட்டை தீர்மானத் திலிருந்து சற்று முன்னேறி செல்லக் கூடிய ஆவணமாகவே இதனை கருதுகிறோம்.
புலிகள் இயக்கத்தின் ஒரு அஸ்திரமாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வதேசத்தின் உதவியை பெறுவது என்றும் இந்தியாவின் உதவியை பெறுவது என்றும் குறிப்பிட்டுள்ளது என்றும் அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் வட மாகாண தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு பொறுப்பான ஐ. ம. சு. கூட்டணியின் பொதுச் செயலர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி ஆகியோரும் கலந்து கொண்டனர். 30 வருட கால யுத்தத்தின் பின்னர் தமிழ் சிங்கள மக்களிடையேயான இடைவெளியை குறைத்து ஒற்றுமையு ணர்வினையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து அதை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் தந்திரோபாயமே இதில் உள்ளடக் கப்பட்டுள்ளது.
வட்டுக் கோட்டை பிரகடனம் தான் வடக்கு இளைஞர்களை பிரிவினை வாதத்துக்கு தள்ளியமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தது. அதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே இது அமைந்துள்ளது.

No comments:
Post a Comment