Saturday,September,14, 2013
இலங்கை::தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பொறுப்புக்கூற தவறுமாக இருந்தால், சர்வதேச ரீதியான தமது அழுத்தங்களை அமெரிக்கா மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா டேசாய் பிஸ்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட்சபையில் இடம்பெற்ற வெளிவிவகார குழு கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மீளமைப்ப நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தாம் பொறுப்புக் கூற வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இலங்கை 30 தேவாலயங்கள் வரையில் பௌத்த அடிப்படை வாதிகளால் தாக்கப்பட்டிருப்பதாக, செனட் உறுப்பினர் மக்ரோ அன்டோனியோ ருபியோ சுட்டிக்காட்டினார்.
எனினும் இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்று நிஷா தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும், இந்த விடயங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா மேலும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என்றும் மற்றுமொரு செனட் உறுப்பினரான ஜோன் மெக்கேய்ன் கோரினார்.
இதற்கு பதில் வழங்காய நிஷா பீஸ்வால், இலங்கை விடயத்தில் அமெரிக்கா வினைத்திறனாக செயற்படுவதாக தெரிவித்தார்.
அத்துடன் உள்ளக விசாரணைகள் மூலம் இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புடைமையை வெளிப்படுத்த தவரினால், சர்வதேச ரீதியான விசாரணைகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

No comments:
Post a Comment