Thursday, September 19, 2013

சங்கரியைத் தோற்கடிக்க சிறிதரன் முயற்சி: விக்கியை வீழ்த்த மாவை சுரேஷ¤டன் கூட்டு: புலிகளின் தமிழ்த் தேசியத்திற்கு பாடுபடுபவர்கள் பாதைகளில் பகிரங்க சண்டை!!

Thursday, September 19, 2013
இலங்கை::அடிதடிச் சண்டை இப் பொழுது வட மாகாண சபைத் தேர்தலிலும் களை கட்டி நிற்பதை காணக்கூடிய தாக இருக்கின்றது. (புலிகளின்) தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக இலட்சியம் பேசினாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் பகிரங்கமாக அடிதடிச் சண்டை நடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
 
கடந்த பொதுத் தேர்தலின் போதும் இந்த காலை வாரும் நடவடிக்கை யால்தான் தான் தோற்றுப் போனதாக அத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டி யிட்ட சி.வி.கே சிவஞானம் பின்னர் புலம்பியதை நாம் கேட்டோம். இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் இந்த காலை வாரும் முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சற்றுத் தீவிரமடைந்திருப்பதைக் காண முடிகிறது.
 
முதலமைச்சர் பதவிக்குக் கண் வைத்திருந்த மாவை சேனாதிராசா, அது கிடைக்காமல் போனதற்காக சம்பந்தன் மீதும், சுமந்திரன் மீதும் மிகவும் காட்டமாக இருப்பது ஒரு பக்கம் இருக்க, முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனின் காலை வாரும் முயற்சிகளில் திரை மறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
 
விக்னேஸ்வரன் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, கூட்டமைப்பு வேட்பாளர்களில் அவரை வி வேறு சிலர் கூடுதலான வாக்குகளைப் பெற வைத்து, விக்கினேஸ்வரனை தலைகுனிய வைப்பதிலும் அதன் மூலம் அவர் முதலமைச்சராவதைத் தடுப்பதிலும் மாவை - சுரேஸ் குழுவினர் தீவிரமாக இருப்பதாக அறிய முடிகிறது.
 
இது ஒருபுறமிருக்க, கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு எம்.பி.சிறிதரன், இந்த மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரியை எப்படியும் தோற்கடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் வேலை செய்து வருகின்றார், அவரது முனைப்புக்கு விருப்பு வாக்குகள் காரணம் அல்ல. வேறு சில காரணங்கள் இருக்கின்றன.
 
ஆனந்தசங்கரியை கூட்டமைப்பு சார்பில் இந்த மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது அரசியல் எதிர்காலம் சூனியமாகி, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிர்காலத்தில் மண் விழுந்துவிடும் என்ற அச்சம் சிறிதரனுக்கு ஏற்பட்டுள்ளது.
 
 ஆனந்தசங்கரி மலையாகவும், சிறிதரன் மடுவாகவும் இருக்கும் நிலையில், ஆனந்தசங்கரி வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், அரசியல் ரீதியாகவும், பதவி ரீதியாகவும் தனக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என சிறிதரன் எம்.பி அஞ்சுகிறார்.
 
சிறிதரனின் கவலை எல்லாம் ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் மீண்டும் காலூன்றினால், தனது வியாபாரத்தை மூடிக்கட்ட வேண்டி வருமே என்பதுதான். ஆனந்தசங்கரியின் கவலை எல்லாம் வயதும் போய்க்கொண்டே இருப்பதால் இருக்கின்ற கொஞ்சக் காலத்துக்குள் மீண்டும் ஒரு பாராளுமன்ற உறுப்பின ராகவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு மாகாணசபை உறுப்பினராகவோ (வாய்ப்பிருந்தால் மாகாண மந் திரியாகவோ) வந்துவிட வேண்டும் என்பதுதான்.
 
*************************************************************

காதோடு காதாக...

தனக்குப் படாமல் கல்லெறியச் சொன்ன பெண் வேட்பாளர்
 
தமது வாகனத்திற்கு தாமே அடி ஆட்களை வைத்துக் கல்லெறிந்து சேதப்படுத்திவிட்டு பிரசாரம் தேடும் செயல்களை இப்போது வடக்கில் பரவலாகக் காண முடிகிறது. இந்த லிஸ்டில் (புலி)அம்மணி ஒருவரும் சேர்ந்துள்ளார். ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிப்பதுதான் இவர்களது திட்டமாம். ஒன்று அனுதாப வாக்கு, இரண்டு பணம் செலுத்தாது பத்திரிகைகளில் இலவச பிரசாரம், மூன்று அரசாங்கத்தின் மீது வீண் பழி. ஆனால் ஒன்று, கல்லெறிய வரும் அடியாட்களிடம் தனக்குப் படாமல் எறியுங்கோ என்று காதில் போட்டு வைத்துவிடுவார்களாம். வாகனத்திற்குத்தான் எவ்வளவு சேதமானாலும் காப்புறுதிப் பணம் கிடைக்குமே. பலே கில்லாடிகள்தான்.
 
குணதாச ஐயா இவ்வளவு தூரம் பயப்படத் தேவையில்லை
 
முஸ்லிம்களுடன் ஒன்றிணைந்து தனிநாடு அமைக்க தமிழ்க் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத் தலைவர் குணதாச அமரசேகர அச்சம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார். இவர் நினைப்பது ஒருபோதும் நடக்காத காரியம். புலிகள் இருந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளை கை கட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்தவர்கள்தான்
 
இந்தத் தமிழ்க் கூட்டமைப்பினர். அதனை முஸ்லிம் தலைவர்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். பதவி ஆசையில் தலைவர்கள் மறந்து செயற்பட்டால் மக்கள் இவர்களை மறக்க நேரிடும். அதனால் குணதாசா ஐயா பயப்படத் தேவையில்லை.

No comments:

Post a Comment