Thursday, September 19, 2013

கச்சத்தீவை மீட்கும் பிரச்னை : முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை!

Thursday, September 19, 2013
சென்னை::கச்சத்தீவை மீட்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.
 
கச்சத்தீவு, 1974ல் இலங்கைக்கு வழங்கப்பட்டது. தற்போது, அங்கு மீன் பிடிக்கச் செல்லும், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கின்றனர். இதைத் தவிர்க்க, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை, திரும்பப் பெற வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக, பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதினார்.
 
 ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, கச்சத்தீவை மீட்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "கச்சத்தீவு, இலங்கைக்குரியது' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விவாதிக்க, நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர்கள் , தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி மற்றும் துறை செயலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டில், வருவாய் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள், மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க முடிவு
செய்துள்ளது.

No comments:

Post a Comment