Thursday, September 19, 2013

ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்காதீர் : இலங்கை அகதிகளுக்கு வேண்டுகோள்!

Thursday, September 19, 2013 (File Pic)
புதுச்சேரி::கடல் மார்க்கமாக, உயிரை பணயம் வைத்து ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என, இலங்கை அகதிகளை டி.எஸ்.பி., கேட்டுக்கொண்டார்.
 
புதுச்சேரி அடுத்த கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில், அகதிகள் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.,ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கியூ பிரான்ச் இன்ஸ்பெக்டர் ராஜ்பாபு, கோட்டக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கியூ பிரான்ச் டி.எஸ்.பி., வெள்ளைச்சாமி பேசுகையில், " இலங்கை தமிழர்களுக்கு, இங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், சமீப காலமாக கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு குடும்பத்துடன் செல்வது அதிகரித்துள்ளது.
 
இதுபோன்ற சமயங்களில் பலர் கடலில் மூழ்கி இறந்து விடுகின்றனர். நடுக்கடலில் உயிருக்கு தத்தளிக்கின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அந்த நாட்டின் குடிமக்களாக மாறி விடலாம் என தவறான கண்ணோட்டத்துடன் இவ்வாறு செல்கின்றனர். ஏஜென்ட்களை நம்பி யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்' என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், கீழ்புத்துப்பட்டு பழைய இலங்கை அகதி முகாம், புதிய இலங்கை அகதி முகாமை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment