Friday, September 20, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்களும். வாக்குப் பெட்டிகளும் இன்றைய தினம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
தேர்தல் நடைபெறவுள்ள 3 மாகாணங்களிலும், மாவட்ட செயலாளர்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தல் கடமைகளில் 40 ஆயிரம் உத்தியோகத்தர்கள் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வடக்கு. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக 43 இலட்சத்து 73 ஆயிரத்து 252 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய மாகாணத்திலேயே ஆகக் கூடுதலாக வாக்களர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த மாகாணத்தில் 18 இலட்சத்து 89 ஆயிரத்து 557 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் 17 இலட்சத்து 54 ஆயிரத்து 477 பேரும், வட மாகாணத்தில் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 477 பேரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மூன்று மாகாணங்களிலும் 3736 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 24 வாக்களிப்பு நிலையங்களும் அடங்கியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment