Friday, September 20, 2013
இலங்கை::கண்டி மஹியாவ பிரதேசத்தில் உள்ள அஸாத் சாலியின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. .
மஹியாவ பகுதியில் உள்ள அஸாத் சாலியின் ஆதரவாளர் மொஹமட் ஹக்கின் வீட்டில் அமைந்திருந்த தேர்தல் அலுவலகம் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு அப்பட்டமான தேர்தல் வன்முறை. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான கேவலமான செயல்களால் மக்களால் உறுதி செய்யப்பட்டுள்ள அஸாத் சாலியின் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment