Friday, September 20, 2013

இலங்கை ராணுவம் பிடித்து சென்ற 19 தமிழக மீனவர்களை 30ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு!

Friday, September 20, 2013
இலங்கை::புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சிறைபிடித்து சென்றனர். யாழ்ப்பாணம் முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று  யாழ்ப்பாண குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதை விசாரித்த நீதிபதி, அவர்கள் அனைவரையும் வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த 5 மீன்பிடி படகுகளையும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள காரைநகர் கடற்கரையில் ராணுவத்தினர் நிறுத்திவைத்துள்ளனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment