Friday, September 27, 2013
இலங்கை::கடந்த வெசாக் காலத்தில் மாத்தறை வெசாக் வலயத்தில் பணியாற்ற சிறையதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற முக்கிய புலிச் சந்தேக நபர் ஒரு மாத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த சந்தேக நபரை மாத்தறைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்து அவர் காணாமல் போக காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திர ரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment